புளிமூட்டையென ஜனத்திரளினுள் நுழைந்து
அடித்துப் பிடித்து
சன்னலோர இருக்கையில் அமர்கையில்
திடுக்கிட வைத்தது அந்த ‘படீர்’ சப்தம்-
எட்டு வயது சிறுவனொருவன்
தன் கையே தனக்குதவி என
முதுகில் அடித்துக் கொண்டு
பிச்சை கேட்கிறான்
விட்டெறியும் காசு
‘ஜல்’ என்று தரையில் விழ
அவன் ‘படீர்’ சுதி சேர்கிறான்
என்ன கொடுமை இது
இதை எல்லாம்
முழுமையாக காணக்கூடாது என்றுதான்
சன்னலுக்கு கம்பிகள் வைத்தனரோ?
என்று எண்ணத்தில் தோன்ற
“குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்” என்ற
போஸ்டரை தாண்டி வேகமெடுக்கிறது பேருந்து!
இதை ஒழிப்பது எங்ஙனமோ என்ற
ஏக்கத்துடன்
சாலையோர புளிய மரங்களும்
என் நினைவுகளும்
அவனை நோக்கி ஓட
எதிர் திசையில் தொடர்கிறது பயணம்!
என் நினைவுகளும்
ReplyDeleteஅவனை நோக்கி ஓட
எதிர் திசையில் தொடர்கிறது பயணம்!
மூன்று வரிகள் நம் வாழ்வின்
யதார்த்த நிலையை மிக அழகாக விளக்கிப் போகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteகண்களில் கண்ணீர்,இயலாமையை நினைத்து.
ReplyDeleteகண்களில் கண்ணீர்,இயலாமையை நினைத்து.
ReplyDelete