Wednesday, December 21, 2016

மழலையர் உலகில்


மூன்றாண்டு பட்டமில்லை;
முறையான பயிற்சியுமில்லை -ஆயினும்
பள்ளி சென்று வந்த
முதல் நாளே
தாங்களும்
ஆசிரியைகளாகி விடுகின்றனர் -
குழந்தைகள் !

அம்மாவின்
அக்கறை சமையலைக்கூட
சாப்பிட மறுத்து
அடம் பிடிக்கும் குட்டிப்பாப்பா -
சொப்பு சாமானில்
தான் சமைத்ததை மட்டும்
சப்புக் கொட்டி சாப்பிடும்
ரகசியம் என்னவோ?



Friday, January 8, 2016

மீனம்பாக்கம் நினைவுகள்

சாலையில் செல்லும்
சகோதர வாகனங்களை
ஏளனமாக பார்த்தவாறே
எட்டிப் பறக்கிறது - விமானம் !

பறவைக்கான வானை
ஆக்கிரமித்து பறக்கிறது விமானம் -
ஆயினும் செய்தி -
பறவை மோதி
விமான கோளாறு!