மழைத்துளியும்
கண்ணீர் நிகர்ப்ப
இருப்பதால்
மேனிமீது படும்போதெல்லாம்
உருகுகிறது-
மனம்!
நிழலின் அருமையை
நிதம் உணர்த்தும்
சுட்டெரிக்கும் சூரியன்!
முகம் அறையும்
பனிக்காற்றின் மீதுள்ள கோபம்
காதுநுனி சில்லிப்பில்
காணாமல் போகும் மாயமென்ன ?
இயற்கையோடு
இயைந்தது தானே
இனிய வாழ்க்கை!
ஆயினும்
கடையாணியான
சுற்றுசூழல் கழன்று விட்ட பின்னும்
காலச்சக்கரம்
சுற்றிக்கொண்டு இருக்கிறது
இன்னும் வேகமாக!
சுற்றிக்கொண்டு இருக்கிறது
ReplyDeleteஇன்னும் வேகமாக!
அருமை .