Tuesday, January 17, 2012

எழுதியாகணும்

                  
              ஒரு கதை எழுதியாகணும்! அதுவும் சிறுகதை சார்!
ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ, குங்குமத்திலோ,
 கல்கியிலோ வெளிவருகிற மாதிரி எழுதியாகணும்.

                  "ஒரு ஊரிலே கணேசன் என்ற பணக்காரர் இருந்தார்"
  என்று சிறுபிள்ளைதனமாக ஆரம்பித்தோ,

                  "வெளிர் ரோஸ் நிறவானில் உதைப்பட்ட பந்து போல்
சூரியன் போய் மறைவதை திக்... திக்...  மனதோடு பார்த்துக்
கொண்டிருந்த  கணேசனுக்கு இன்றைக்கெல்லாம் ஐம்பது
 வயதிருக்கும்" என்று ராஜேஷ்குமார் போல் ஆரம்பித்தோ,

                   "அதோ மெர்சிடிஸ் காரிலிருந்து சபாரி சூட்  சகிதம்
 இறங்கும் கணேசனை  உங்களுக்கு தெரியுமா?"  என்று
சுபா போல் ஆரம்பிதோ,

                 "
2012  ஜனவரி 7  கணேசன் கெமிக்கல்ஸ்              ஐம்பதின் எல்லையிலிருக்கும் கணேசனுக்கு காதோரம்
இருக்கும் நரை, முன் தலை வழுக்கை, சபாரி சூட் போன்றவை
அதிகம் தான்"  என்று ஆர்னிகா நாசர் போல் ஆரம்பிதோ,

எப்படியோ ,
                  ஒரு கதை எழுதியாகணும்! அதுவும் சிறுகதை சார்!
ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ, குங்குமத்திலோ,
கல்கியிலோ வெளிவருகிற மாதிரி எழுதியாகணும்.






2 comments:

  1. இதுவே ஒரு சிறு க(வி)தை தானே அன்புதேவன்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இது போன்ற தங்கள் ஊக்குவிப்புக்களால் நிறைவேறும் நன்றி

      Delete