Tuesday, July 28, 2015

வாழும் கலாம்

இனிய கலாம்
இன்னும் பல காலம்
நீங்கள் இருந்திருக்கலாம்...

அக்கினிக்கு சிறகு
 முளைக்க வைத்தவரே
சிறகுகளுக்கும் அக்கினி
பற்ற வைத்தவரே




செயற்கைக்கோளோ
செயற்கை காலோ
மானுடம் உய்விக்க
ஓயாது உழைத்தவர் நீங்கள்

அரிசுவடி படிக்கும் சிறுவரோ
அறிவியல் படிக்கும் இளைஞரோ
தொழிற்நுட்பம் பழகும் பொறியாளரோ
அனைவருக்கும்
ஆதர்ச நாயகன் நீங்கள்!

மண்ணுலகம் மட்டுமல்ல
விண்ணும் சொல்லும் -
என்றும்
உங்கள் பெயரை !