Sunday, April 22, 2012

இரவு வானம்


இரவு  வானம்
வேணும் எனக்கு!

முந்திரிகளால் அலங்கரிக்கப்பட்ட
கருப்பு கேக்
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

ஆயிரம் பற்களை காட்டி
சிரித்திடும் அழகு குழந்தை
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

கண்ணில்
கருவிழியும் உண்டு
வெண்விழியும் உண்டு
என்
இரவு வானம்
பார்வைகளை பதிவு செய்யும் கருவிழி
அது
கற்றுக் கொடுத்த
தொலைநோக்குப் பார்வைகள்
ஏராளம்!
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

உண்மையில்
பொருட்களுக்கு நிறமில்லை
எனக் கூறும்
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!


எக்ஸ்கியூஸ்  மீ..,
உங்கள் செயற்கை விளக்குகளை
கொஞ்சம் அணையுங்களேன், பிளீஸ்
அப்படியே வெளியே வந்து
அண்ணாந்து பாருங்கள்
அந்த
விண்ணலங்கார விளக்குகளை !
இரவு வானம்
வேணும் எனக்கு!

அதெல்லாம் இருக்கட்டும்
அந்த
அயோக்கிய சூரியனை
யார் இப்போது
வரச் சொன்னது?
அசையாது
ஆயிரம் முனிவர்களிருந்த
தவத்தினை
கலைத்து விட்டானடா பாவி...
அந்த
 இரவு வானம்
வேணும் எனக்கு!

5 comments:

  1. ''...முந்திரிகளால் அலங்கரிக்கப்பட்ட
    கருப்பு கேக்..''
    நல்ல உவமை. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. அயோக்கிய சூரியன்// இரவு வானம் வேண்டும் எனக்கு. அருமையான கவிதை வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. most sung particle in the planet earth is the MOON for thousands of years...........................thousands of poets have written lakhs of poems about moon and yours are very very new perceptions for moon....i wonder ur imagining power.....Ecstatic when read this poem....vazthugal ulagil ulla anaithu malargalalum

      Delete
  3. antha iravu vaanam kidaithathu sila naatkal mattum nam cuddalore il.......AFTER THANE

    ReplyDelete
  4. unmai than
    thank you for ur valuable comments

    ReplyDelete